நீலகிரி மசினகுடி பகுதியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சாலையின் இரு புறமும் இளஞ்சிவப்பு நிறத்தில் பிரகாசமாக பூத்துள்ள கிளிரிசிடியா செப்பியம் மலர்கள்
நீலகிரி மசினகுடி பகுதியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சாலையின் இரு புறமும் இளஞ்சிவப்பு நிறத்தில் பிரகாசமாக பூத்துள்ள கிளிரிசிடியா செப்பியம் மலர்கள்;
மசினகுடி பகுதியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சாலையின் இரு புறமும் இளஞ்சிவப்பு நிறத்தில் பிரகாசமாக பூத்துள்ள கிளிரிசிடியா செப்பியம் மலர்கள், அவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.... நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வெளி மண்டல வனப்பகுதியில் அமைந்துள்ள மசினகுடி, மாவனல்லா உள்ளிட்ட பகுதிகளில் ஆசியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை பூர்வீகமாக கொண்ட கிளிரிசிடியா செப்பியம் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. குறிப்பாக முதுமலை, மசினகுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக நிலவு வரும் கடும் வெயில் காரணமாக வனப்பகுதி முழுவதும் செடி கொடிகள் கருகியும், மரங்கள் காய்ந்தும் வறட்சி ஏற்பட்டு வருகிறது. இதனால் வனப்பகுதி முழுவதும் பசுமை குறைந்து காணப்படும் நிலையில் வனப்பகுதியின் நடுவே அமைந்துள்ள சாலையின் இருபுறமும் தற்போது பிரகாசமாக இளஞ்சிவப்பு நிறத்தில் கிளிரிசிடியா செப்பியம் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இளஞ்சிவப்பு நிறத்தில் ரம்மியமாக பூத்துள்ள இந்த மலர்கள் தேனீக்கள், பட்டாம்பூச்சிகள் மற்றும் பறவைகளை ஈர்த்து வருவதோடு, தேனீக்கள் அதிகளவில் தேன் சேகரிக்கவும் மலர்கள் முக்கிய பங்கு வகுக்கின்றன. இத்தகைய மலர்கள் தற்போது முதுலை புலிகள் காப்பகம் வனப்பகுதி மற்றும் சாலைகளின் இருபுறமும் ரம்மியமாக பூத்துக் குலுங்குவதால் அவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.