நீலகிரி மாவட்டத்தில் விளையக்கூடிய மருத்துவ குணமிக்க மலைப்பூண்டிற்கு கடும் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்...

நீலகிரி மாவட்டத்தில் விளையக்கூடிய மருத்துவ குணமிக்க மலைப்பூண்டிற்கு கடும் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்...;

Update: 2025-02-22 13:46 GMT
நீலகிரி மாவட்டத்தில் விளையக்கூடிய மருத்துவ குணமிக்க மலைப்பூண்டிற்கு கடும் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்... நஷ்டத்தை ஈடுகட்ட அரசு மானியம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் ...... நீலகிரி மாவட்டத்தில் சுமார் 7000 ஹெக்டேர் பரப்பளவில் கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், பூண்டு, உள்ளிட்ட மலை காய்கறிகளை சாகுபடி செய்யபடுகிறது. குறிப்பாக இங்கே விளையக்கூடிய மலைப்பூண்டு மருத்துவ குணமிக்கதாகவும் சுவை மற்றும் தரம் மிகுந்ததாக உள்ளதால் வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இந்த பூண்டிற்கு அதிக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ பூண்டு ரூபாய் 400 முதல் 500 வரை விற்பனையானது. இதனைத் தொடர்ந்து அதே விலைக்கு விதை பூண்டுகளை வாங்கி பெரும்பாலான விவசாயிகள் கடந்த நவம்பர் மாதத்தில் விதைத்தனர். தற்பொழுது ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பூண்டு அறுவடைக்கு தயாராக உள்ளது.இந்நிலையில் கடந்த சில வாரங்களாக  அறுவடை செய்யப்பட்டு வரும் பூண்டு கிலோ ஒன்று ரூபாய் நாற்பது முதல் 100 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாகிறது. இதனால் மலை மாவட்ட விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும் முதலீடு செய்து பூண்டு சாகுபடி செய்துள்ள நிலையில் ஏற்பட்டுள்ள நஷ்டத்தினால் கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள கடனை அடைக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். எனவே இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு விவசாயிகளின் நஷ்டத்தை ஈடுகட்ட மானியம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News