முதல்வர் மருந்தகங்களை காணொளி காட்சி வாயிலாக திறந்து முதல்வர்

பெரம்பலூர் மாவட்டத்தில் 17 முதல்வர் மருந்தகங்களும் அடங்கும். இந்த நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் ஆகியோர் பெரம்பலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் உள்ள முதல்வர் மருந்தகம் அருகில் நேரலையில் பார்வையிட்டனர்;

Update: 2025-02-24 07:31 GMT
பெரம்பலூர் மாவட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 17 "முதல்வர் மருந்தகங்களை" காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து, பெரம்பலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முதல்வர் மருந்தகத்தில் அந்நிகழ்வை காணொலியில் பார்வையிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் முதல் விற்பனையை தொடங்கி வைத்து 61 பயனாளிகளுக்கு ரூ.47.68லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார் . தமிழ்நாடு முதலமைச்சர் கூட்டுறவுத் துறையின் சார்பில் சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக கலையரங்கத்தில் இன்று (24.02.2025) நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதும் 1,000 "முதல்வர் மருந்தகங்களை" காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள். இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் 17 முதல்வர் மருந்தகங்களும் அடங்கும். இந்த நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் ஆகியோர் பெரம்பலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் உள்ள முதல்வர் மருந்தகம் அருகில் நேரலையில் பார்வையிட்டனர். பின்னர், பெரம்பலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டுப்பாட்டில் உள்ள முதல்வர் மருந்தகத்தில் முதல் விற்பனையினை தொடங்கி வைத்தார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 15.08.2024 சுதந்திரதின விழா உரையில், “பொதுப் பெயர்(ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்துகளையும், குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக 1,000 முதல்வர் மருந்தகங்கள் துவங்கப்படும் “ என அறிவித்தார்கள். அதனைத்தொடர்ந்து, இத்திட்டத்தினை செயல்படுத்திடும் விதமாக காணொளி கட்சி மூலமாக தமிழகம் முழுவதும் முதல்வர் மருந்தகத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்கள். பெரம்பலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் கூட்டுறவுத் துறை மூலம் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் தொழில் முனைவோரிடம் முதல்வர் மருந்தகங்கள் அமைப்பதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு தெரிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் பெரம்பலூர், குரும்பலூர், இரூர், கொளக்காநத்தம், வேப்பந்தட்டை, அரும்பாவூர், பூலாம்பாடி, வி.களத்தூர் மற்றும் வாலிகண்டபுரம் ஆகிய 9 இடங்களில் கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவும், பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 3 இடங்கள் மற்றும் பாளையம், இலாடபுரம், வெங்கனூர், மங்கலமேடு மற்றும் லெப்பைக்குடிக்காடு உள்ளிட்ட 8 இடங்களில் தொழில் முனைவோர் மூலமாகவும் என மொத்தம் 17 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்பட்டு, இன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் மருந்தகத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தரமான மருந்துகள், குறைவான விலையில், சந்தை மதிப்பை விட 75 சதவீதம் வரை குறைந்த விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது. மேலும் இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட தொழில் முனைவோருக்கு முதல்வர் மருந்தகத்திற்கு உட்கட்டமைப்பு வசதிகளான ரேக்குகள், குளிர்சாதனப்பெட்டி, ஏசி மற்றும் மருந்துகள் வைப்பதற்கான முதல்கட்ட மானியம் ரூ.1.50 லட்சம் மற்றும் இறுதி கட்ட மானியமாக ரூ.1.50 லட்சம் மதிப்பிற்கு ஜெனரிக் மருந்துகள் மற்றும் பிற மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட கூட்டுறவுச் சங்கங்களுக்கு முதல் கட்ட மானியம் ரூ.1.00 லட்சம் மற்றும் இறுதிகட்ட மானியம் ரூ.1.00இலட்சம் மதிப்பிற்கு ஜெனரிக் மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டம் மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் வழங்குவது மட்டுமல்லாது, Bpharm, Dpharm படித்தவர்கள் தொழில் முனைவோர்களாகும் வாய்ப்புகளையும் உருவாக்கித் தருகின்றது என்றால் அது மிகையல்ல. இந்நிகழ்வில், 26 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.15,53,000 மதிப்பீட்டில் மகளிர் சுய உதவி குழு கடன்களும், 07 பயனாளிகளுக்கு ரூ.5,35,000 மதிப்பீட்டில் விவசாய பயிர் கடனும், 03 பயனாளிகளுக்கு ரூ.1,80,000 மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்பு கடனும், 25 பயனாளிகளுக்கு ரூ.25,00,000 மதிப்பீட்டில் வெள்ளாடு வளர்ப்பு கடனும் என மொத்தம் 61 பயனாளிகளுக்கு ரூ.47,68,000 மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் ஆகியோர் வழங்கினார்கள். இந்நிகழ்வில், பெரம்பலூர் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் க.பாண்டியன், நகர்மன்ற தலைவர் அம்பிகா ராஜேந்திரன், அட்மா தலைவர் வீ.ஜெகதீசன், கூட்டுறவுச் சங்கங்களின் சரகத் துணைப்பதிவாளர் அ.இளஞ்செல்வி மற்றும் துணைப்பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) பா.சிவக்குமார், கூட்டுறவு சார் பதிவாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள், கூட்டுறவு சங்க பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News