நீலகிரியில் ட்ரக்கிங் செல்ல அனுமதி இல்லை வனத்துறையினர் அறிவிப்பு

நீலகிரியில் ட்ரக்கிங் செல்ல அனுமதி இல்லை வனத்துறையினர் அறிவிப்பு;

Update: 2025-02-24 13:37 GMT
நீலகிரி மாவட்டத்தில் வறட்சி காலம் துவங்கி உள்ளதால் ஏப்ரல் 15ம் தேதி வரை Trek தமிழ்நாடு திட்டத்தின் கீழ் வனப் பகுதிக்குள் நடைபயணம் மேற்கொள்ள தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. வறட்சி காலத்தில் தீ பருவம் அபாயம் இருப்பதால் trek tamilnadu திட்டத்தின் மூலம் வனப்பகுதியில் நடைபயணம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்ட இருப்பதாகவும், நீலகிரி வனக்கோட்டத்தில் 100 கி.மீட்டர் தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வன அலுவலர் கௌதம் தகவல். சுற்றுலாப் பயணிகள் சாலை ஓரங்களில் தீ மூட்டி சமையல் செய்ய கூடாது என அறிவுறுத்தல்... இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டம் 55 சதவீதம் வனப்பகுதி மிகுந்த மாவட்டமாகும். இங்குள்ள வனப்பகுதிகளில் தற்போது இலையுதிர் காலம் தொடங்கியுள்ளது . இதனால் வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக TREK TAMILNADU திட்டத்தின் கீழ் வனப்பகுதிக்குள் நடைபயணம் மேற்கொள்வதை ஏப்ரல் 15 ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் நீலகிரி வன கோட்டத்திற்குட்பட்ட வனப் பகுதிகளில் காட்டு தீ ஏற்படுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 100 கிலோ மீட்டர் தூரத்திற்கு  தீ தடுப்பு கோடுகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வன அலுவலர் கௌதம் தெரிவித்துள்ளார். நீலகிரிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் சாலை ஓரங்களில் சமைக்க கூடாது என வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதே போல் வனச் சாலைகளில் செல்லும்போது புகைப்பிடித்து சாலை ஓரங்களில் வீசக்கூடாது எனவும் வனத்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட முழுவதும் உள்ளே வனப்பகுதியில் தற்காலிக ஊழியர்களைக் கொண்டு காட்டு தீ  ஏற்பட்டால் அணைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Similar News