தஞ்சாவூர் அருகே அஞ்சல் அலுவலர் காரில் விஷம் குடித்த நிலையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்து கிடந்தார். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை ரயில் நிலைய சாலை கே.வி.ஆர். காலனியை சேர்ந்த அன்பரசன் மகன் அருண்குமார் (24). இவர் தஞ்சாவூர் தலைமை அஞ்சலகத்தில் அலுவலராகப் பணியாற்றி வந்தார். இவர் வல்லம் முதலைமுத்துவாரி பகுதியில் செவ்வாய்க்கிழமை வெகுநேரமாக நின்று கொண்டிருந்த காரில் விஷம் குடித்த நிலையில் உயிரிழந்து கிடந்தார். தகவலறிந்த காவல் துறையினர் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டதில், அவர் குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது குறித்து வல்லம் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.