தஞ்சாவூரில் அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம் 

ஆர்ப்பாட்டம்;

Update: 2025-02-26 16:59 GMT
ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில், தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பாக செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் ஆர். கலியமூர்த்தி தலைமை வகித்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஆர். ராஜகோபாலன் கோரிக்கை விளக்க உரையாற்றினார். நிறைவாக மாவட்ட செயலாளர் இரா.தமிழ்மணி நன்றி கூறினார்.  பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலி பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.  இதில், சங்க நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், பூபதி, சுத்தானந்தன், பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News