ராமநாதபுரம் கோவில் திருவிழா முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது

மாசிக் களரியை முன்னிட்டு இரண்டு பிரிவுகளாக மாட்டு வண்டி பந்தயம்* *பூஞ்சிட்டு மாட்டு வண்டி தலைகீழாக கவிழ்ந்து ஓடி 2_வது பரிசு பெற்றது;

Update: 2025-02-27 02:34 GMT
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அரியமங்கலம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ நல்லக்க நாச்சியம்மன் கோவில் மாசிக் களரியை முன்னிட்டு இரண்டு பிரிவுகளாக மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. பூஞ்சிட்டு, சிறிய மாடு என இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் சிறிய மாடு பிரிவில் 18 ஜோடி மாடுகளும், பூஞ்சிட்டு மாடு பிரிவில் 26 ஜோடி மாடுகளும் கலந்து கொண்டன மாட்டுவண்டி பந்தயத்தில் ராமநாதபுரம் தூத்துக்குடி திருநெல்வேலி மதுரை சிவகங்கை விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாட்டு வண்டி பந்தய வீரர்கள் தங்களது காளைகளுடன் ஆர்வமுடன் பங்கேற்றனர். சிறிய மாடு பந்தயத்திற்கு முதல் பரிசாக 72 ஆயிரம் இரண்டாம் பரிசாக 62 ஆயிரம், மூன்றாம் பரிசாக 52 ஆயிரம் நான்காம் பரிசாக 42 ஆயிரம் பரிசுகளும், பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசாக 60,000 இரண்டாம் பரிசாக 50,000 மூன்றாம் பரிசாக 40,000 நான்காம் பரிசாக 30,000 பரிசுகள் வழங்கப்பட்டது முதல் நான்கு இடங்களை பெற்ற மாட்டுவண்டி பந்தய வீரர்களுக்கு குத்துவிளக்கு ரொக்க பணம் நினைவு பரிசு வழங்கப்பட்டது மாட்டுவண்டி பந்தயத்தை பொதுமக்கள் ஏராளமானோர் சாலையின் இருபுறத்திலும் கண்டு ரசித்தனர். பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தயத்தின் விறுவிறுப்பான கடைசி எல்லை நோக்கி வரும்போது ஒரு வண்டி தலைகீழாக கவிழ்ந்து சக்கரத்துடன் எல்லையை நோக்கி விறுவிறுப்பாக ஓடி இரண்டாவது பரிசை வென்றது

Similar News