ராமநாதபுரம் மாசிக் களரி பூக்குழி இறங்கிய பக்தர்கள்

சோனை பிரியன் கோட்டை மாசிக் களரி திருவிழா பூக்குழி இறங்கிய பக்தர்கள்;

Update: 2025-02-28 04:29 GMT
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள சோனைப் பிரியான்கோட்டை (என்ற) SP கோட்டை கிராமத்தில் உள்ள சூந்தாள மூர்த்தி சமேத பேச்சிஅம்மன் கோவில் மாசி களரி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் இன்று பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக கடந்த 15 நாட்களாக விரதம் இருந்த பக்தர்கள் ஊரின் எல்லையில் உள்ள காளியம்மன் கோவிலில் இருந்து அக்னி சட்டி, பால்குடம் எடுத்து கிராமத்தை வலம் வந்து சூந்தாள மூர்த்தி சமேத பேச்சிஅம்மன் கோவில் முன்பு உள்ள பூக்குழியில் ஏராளமான பக்தர்கள் இறங்கினர். இந்த பூக்குழி திருவிழாவில் பூக்குழியில் இறங்கிய பக்தர்கள் சர்வ சாதாரணமாக பூக்குழியில் நடந்து சென்றது வியப்பாக இருந்தது. இந்த பூக்குழி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Similar News