ராமநாதபுரம் பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு சார்பாக மாபெரும் வக்பு உரிமை கவனயீர்ப்பு கண்டன பொதுக்கூட்டம நடைபெற்றது;

Update: 2025-02-28 04:33 GMT
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஜூம்மா பள்ளிவாசல் அருகில் கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு தலைமையில் வக்பு திருத்த சட்ட மசோதாவை எதிர்த்தும் , வக்ஃபு சொத்தினை அபகரிக்க துடிக்கும் ஒன்றிய அரசை கண்டித்தும் கீழக்கரையில் அனைத்து ஜமாஅத் பெருமக்கள், சமுதாய அமைப்புகள் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து மாபெரும் வக்ஃபு உரிமை கவன ஈர்ப்பு கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வக்பு பொதுக்கூட்ட குழு தலைவர் முகமது ஃபரூஸ் தலைமை தாங்கினார். கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு தலைவர் ஷேக் பசீர் அஹமத் துணைத் தலைவர் முகமது அஜிஹர் மற்றும் முகமது ஜுபைர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எஸ்டிபி கட்சியின் நகர் தலைவர் முஹம்மது ஜலீம் தொகுப்புரை வழங்கினார். கீழக்கரை பொதுமக்கள் கூட்டமைப்பு செயலாளர் சப்ராஸ் நவாஸ் வரவேற்புரை வழங்கினார். எஸ்டிபிஐ கட்சியின் மாநில துணைத்தலைவர் அப்துல் ஹமீது , வக்பு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கமிட்டி மாநில ஒருங்கிணைப்பாளர் தூத்துக்குடி சம்சுதீன் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அலாவுதீன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினர். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் இளைஞர் அணி மாநில துணைத்தலைவர் நைனா முகம்மது , எஸ்டிபிஐ கட்சியின் நகர் இணைச்செயலாளர் ஹமீது பைசல் , விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் ஹிதாயத்துல்லாஹ் , இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர் துணைச் செயலாளர் பெளசுல் அமீன் ஆகியோர் கருத்துறை வழங்கினர். அதனைத் தொடர்ந்து ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது அதனைத் தொடர்ந்து 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.. இந்த பொதுக்கூட்டத்தில் கீழக்கரை பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு கண்டனத்தை தெரிவித்தனர்.

Similar News