ராமநாதபுரம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

முதுகுளத்தூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் இதில் 500-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது;

Update: 2025-03-02 07:46 GMT
ராமநாதபுரம் மாவட்டம்முதுகுளத்தூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் : இதில் 500-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது மாற்றுக்கட்சியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர் அதிமுக கொண்டுவந்த அனைத்து திட்டங்களையும் திமுக நிறுத்தி வைத்துள்ளது: 2026 ஆம் ஆண்டு எடப்பாடி தலைமையில் ஆட்சி அமையும் என முன்னாள் அமைச்சர் ராதாகிருஷ்ணன் பேச்சு ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேருந்து நிலையம் முன்பு அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் அதிமுக மத்திய ஒன்றிய கழக செயலாளர் SD.செந்தில் குமார் தலைமையில் நடை பெற்றது. முன்னதாக முதுகுளத்தூர் காந்தி சிலையிலிருந்து பேருந்து நிலையம் வரை அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் குறித்தும்,அதிமுகவிற்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்த துண்டு பிரசுரங்களை மாவட்ட செயலாளர் முனியசாமி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியதாவது: அதிமுக ஆட்சி காலத்தில் கடந்த 1984 ஆண்டுகளுக்கு பிறகு ஆண்ட கட்சி தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தான் என்று குறிப்பிட்டார். பின்னர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நான்கரை ஆண்டுகள் சிறந்த ஆட்சியை கொடுத்தார். மக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்டங்களையும் கொண்டு வந்தார் .அதோடு அல்லாமல் விவசாயம் செழிப்பதற்காக குடிமராமத்து திட்டத்தை கொண்டு வந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தினார். வைகை - குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்தினார் ஆனால் அதனை தற்போது உள்ள திமுக அரசு நிறுத்தி வைத்துள்ளது எனவும் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை செயல்படுத்தவில்லை எனவும் குற்றம் சாட்டினார் . திமுக குடும்ப கட்சியாக செயல்பட்டு வருகிறது. அதனை மக்கள் அகற்ற வேண்டும் 2026 ஆம் ஆண்டு புரட்சி தமிழர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையில் ஆட்சி அமைக்க அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என பேசினார். பின்னர் மாவட்ட செயலாளர் முனியசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மலேசியா பாண்டியன் ஆகியோர் 300க்கும் மேற்பட்ட பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர் . பின்னர் இந்த நிகழ்ச்சியில் மாற்றுக்கட்சியிலிருந்து விலகிய செல்வநாயகபுரம் கிராமத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் மாவட்ட செயலாளர் முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டனர். அவர்களுக்கு அதிமுக வேட்டி அணிவித்து வரவேற்றனர். இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர் எம்.ஏ. முனியசாமி, முன்னாள் எம்எல்ஏ மலேசியா பாண்டி, முதுகுளத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கருப்பசாமி, மேற்கு ஒன்றிய செயலாளர் கர்ணன், நகர செயலாளர் முத்துராமலிங்கம் , எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர் சுந்தரபாண்டியன் , கமுதி ஒன்றிய செயலாளர் எஸ்.பி. காளிமுத்து, கடலாடி ஒன்றிய செயலாளர் முனியசாமி பாண்டியன் முன்னாள் எம்பி நிறைகுளத்தான்,கட்சி நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.

Similar News