வார விடுமுறை நாளான இன்று மலை ரயில் பயணம் மேற்கொள்ள குவிந்த சுற்றுலா பயணிகள்

வார விடுமுறை நாளான இன்று மலை ரயில் பயணம் மேற்கொள்ள குவிந்த சுற்றுலா பயணிகள்;

Update: 2025-03-02 14:13 GMT
வார விடுமுறை நாளான இன்று மலை ரயில் பயணம் மேற்கொள்ள குவிந்த சுற்றுலா பயணிகள் ............. சுற்றுலா பயணிகளுக்கு எந்த ஒரு அசம்பாவிதமோ அல்லது பிரச்சனைக்குரிய விஷயங்கள் ஏற்பட்டால் 1512-139 இந்த எண்ணுக்கு அழையுங்கள் காவல்துறை விழிப்புணர்வை ஏற்படுத்தி அறிவுரை ..................... .......... உலக சுற்றுலா வரைபடத்தில் இடம் பெற்றுள்ள மாவட்டம் நீலகிரி மாவட்டமாகும். இம்மாவட்டத்திற்கு நாள்தோறும் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் சமவெளி பிரதேசங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிவது வழக்கம். இந்நிலையில் உதகை ரயில் நிலையத்தில் மலை ரயிலில் பயணம் மேற்கொள்ள சுற்றுலா பயணிகள் இன்று குவிந்தனர் இங்கு காவல்துறையினர் சுற்றுலா பயணிகளிடம் எவ்வித பிரச்சினைகள் ஏற்பட்டாலும் 1512-139 என்ற டோல் ஃப்ரீ நம்பருக்கு அழைத்து புகார் தெரிவிக்க வேண்டும் எனவும் மலை ரயிலில் பாதுகாப்புடன் பயணம் மேற்கொள்ள வேண்டும் தங்களது உடைமைகள் மற்றும் பொருட்களை பாதுகாக்க வைக்க வேண்டும் என காவல்துறை சார்பில் அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினர். பின்பு சுற்றுலாப் பயணிகள் யுனோஸ்கோ அந்தஸ் பெற்ற மலை இரயிலில் பயணம் செய்து புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்

Similar News