ராமநாதபுரம் பாரதிய ஜனதாமாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு

2026 ல் திமுகவுக்கு முடிவுரை எழுதுவது உறுதி : ராமநாதபுரத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி;

Update: 2025-03-02 16:13 GMT
ராமநாதபுரம் பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் தரணி முருகேசன் இல்ல திருமணத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஏ ஒன் மஹாலில் நடத்தி வைத்த பின்பு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது கூறுகையில் இலங்கையில் புதிய அரசு அமைந்த பிறகு இந்திய தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் அதிகரித்திருப்பது கவலை அளிக்கிறது மீனவர் பிரச்சனை தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரை மீனவர் பிரதிநிதிகளோடு விரைவில் சந்திக்க உள்ளேன் 2026 தேர்தலில் திமுகவுக்கு முடிவுரை எழுதுவது உறுதி மக்கள் கடுமையான அதிருப்தியில் இருக்கிறார்கள் அதெல்லாம் தெரியாமல் இந்த முதலமைச்சர் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார் ரெவியூ மீட்டிங் கூட முதலமைச்சர் நடத்தவில்லை இந்த லட்சனத்தில் தான் திமுக ஆட்சி நடந்து வருகிறது. வேலை வாங்கித் தருகிறேன் என்று கூறி பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டு சிறைக்குச் சென்ற அமைச்சர் செந்தில் பாலாஜி எல்லாம் என்னைப் பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை. நான் செருப்பு தான் அணியவில்லை சிறைக்குச் செல்லவில்லை இலங்கையில் புதிதாக அரசாங்கம் அமைந்த பிறகு மீனவர்கள் மீதான கைது நடவடிக்கை அதிகரித்து வருகிறது இது கவலை அளிக்கிறது. மீனவர்கள் எல்லைதாண்டும் பிரச்சனையை இலங்கை அரசு சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக பார்க்காமல் மனிதாபிமான அடிப்படையில் பார்க்க வேண்டும். எனவே இந்த மீனவர் பிரச்சினை குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரை நாகை ராமநாதபுரம் புதுக்கோட்டை தூத்துக்குடி மாவட்ட மீனவர்களை அழைத்துக் கொண்டு நேரில் சந்தித்து பேச இருக்கிறேன். மீனவர்கள் கஷ்டப்பட்டு தொழில் செய்கிறார்கள் ஆனால் மீனவர்கள் போர்வையில் சில சமூக விரோதிகள் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. தொகுதி மறு சீரமைப்பு விவகாரத்தில் தமிழகத்தில் பாராளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என்று எவ்வளவோ விளக்கம் அளித்த பிறகும் திமுக தேவையின்றி இதில் அரசியல் செய்து வருகிறது. மொழிப் பிரச்சனையை கூட திமுக தேவையின்றி அரசியலாக்குகிறது என்று தெரிவித்தார் பேட்டியின் போது மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் பொன் பாலகணபதி மாவட்ட தலைவர் முரளிதரன் முன்னாள் மாவட்ட தலைவர் தரணி முருகேசன் முன்னாள் மாவட்ட தலைவர் கதிரவன் மாநில செயற்குழு உறுப்பினர் ஜிபிஎஸ் நாகேந்திரன் மாநில துணைத்தலைவர் கலாராணி கிருபாரத்தினம், ராமநாதபுரம் நகர தலைவர் நாகராஜ் மண்டபம் மத்திய ஒன்றிய தலைவர் முருகேசன் மாவட்ட நிர்வாகி நந்தகுமார் மற்றும் வழுதூர் தினேஷ், குமார், உடைச்சியார் வலசை முத்துக்குமார் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இதனை தொடர்ந்து தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி மணமக்களை வாழ்த்தினார் தென்னை வாரிய தலைவர் சுப. நாகராஜன், முன்னாள் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் , உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Similar News