நீலகிரி மாவட்டம் நெலாக்கோட்டை பகுதியில் உலா வந்த ஒற்றைக் காட்டு யானையால் மக்கள் அச்சமடைந்தனர்  ...

நீலகிரி மாவட்டம் நெலாக்கோட்டை பகுதியில் உலா வந்த ஒற்றைக் காட்டு யானையால் மக்கள் அச்சமடைந்தனர்  ...;

Update: 2025-03-03 02:47 GMT
நீலகிரி மாவட்டம் நெலாக்கோட்டை பகுதியில் உலா வந்த ஒற்றைக் காட்டு யானையால் மக்கள் அச்சமடைந்தனர்  ... இருசக்கர வாகனங்களை சேதப்படுத்திய காட்டு யானை ஆக்ரோஷமாக   பொதுமக்களை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது . கூடலூர் அடுத்துள்ள நெலாக்கோட்டை பகுதியில் கடந்த சில நாட்களாக ஒற்றைக் காட்டு யானையின் நடமாட்டம் காணப்படுகிறது . இதனால் மக்கள் மிகுந்த அச்சமடைந்து வருகின்றனர் கடந்த சில நாட்களுக்கு முன்பு  இந்தக் காட்டு யானை காரை சேதப்படுத்தி சூறையாடியது . அதன் பின்பு காட்டு யானை நடமாட்டம் இல்லாமல் இருந்த நிலையில் இன்று திடீரென  காட்டு யானை பஜார் பகுதிக்குள் உலா வந்தது . இதனைக் கண்ட பொதுமக்கள் ஓட்டம் பிடித்து வீடுகளுக்குள்ளே தஞ்சமடைந்தனர் . சாலையில் நடந்து வந்த காட்டு யானை இருசக்கர வாகனங்களை சேதப்படுத்தியது  . பின்பு யானையை கூச்சலிட்டு விரட்டிய பொதுமக்களை கண்டதும் அவர்களை யானை ஆக்ரோஷமாக விரட்டியது . குடியிருப்புகள் உள்ள பகுதியில் உலா வந்த காட்டு யானையால் மக்கள் வெளியே வர அச்சமடைந்து வீடுகளுக்குள்ளேயே தஞ்சமடைந்தனர் . தற்போது வனத்துறையினர் காட்டு யானையை பின்தொடர்ந்து அதை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் . மேலும் காட்டு யானை நடமாடி வருவதால் வீடுகளுக்குள் உள்ள பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என கிராம மக்களும் வனத்துறையினரும் கூச்சலிட்டு எச்சரிக்கை கொடுத்தனர் .

Similar News