ஸ்ரீ சக்திவேல் முருகப் பெருமான் திருக்கோவிலில் சிறப்பு பூஜை!

மேல்மாயில் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மயிலாடும் மலையில் அமைந்துள்ள ஸ்ரீ சக்திவேல் முருகப் பெருமான் திருக்கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.;

Update: 2025-03-05 16:21 GMT
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மேல்மாயில் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மயிலாடும் மலையில் அமைந்துள்ள ஸ்ரீ சக்திவேல் முருகப் பெருமான் திருக்கோவிலில் மாசி மாத கிருத்திகையை முன்னிட்டு இன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. விபூதி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. காலை முதல் சிறப்பு பூஜைகள், சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News