சாலை சீரமைக்கும் பணியை ஊராட்சி மன்ற தலைவர் ஆய்வு!
கே.வி.குப்பம் அருகே சாலை சீரமைக்கும் பணியை ஊராட்சி மன்ற தலைவர் நேரில் சென்று பார்வையிட்டார்.;
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் ஊராட்சி மன்றத்தின் சார்பில் ஊராட்சிக்கு உட்பட்ட கவசம்பட்டு சாலை, பஜார் சாலை, காமாட்சியம்மன் பேட்டை அருந்ததியர் குடியிருப்பு செல்லும் சாலை என பல சாலைகள் குண்டும் குழியுமாக இருந்தது. இந்நிலையில் தற்போது சாலைகள் சீரமைத்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அந்த பணியை ஊராட்சி மன்ற தலைவர் பார்வையிட்டார்.