போளூரில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி.

பேருந்து நிலையம் அருகே விடுபட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றிய நெடுஞ்சாலை துறையினர்.;

Update: 2025-03-06 07:00 GMT
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மாநில சாலையான கடலூர் சித்தூர் (SH-9) சாலை மற்றும் போளூர் - ஜமுனாமரத்தூர்- ஆலங்காயம்- வாணியம்பாடி (SH-215) சாலைகளில் போளூர் பகுதியில் நீண்ட காலமாக நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தினை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்ததை தொடர்ந்து திருவண்ணாமலை கண்காணிப்பு பொறியாளர் கிருஷ்ணசாமி , திருவண்ணாமலை கோட்ட பொறியாளர் ஞானவேல் உத்தரவின் பேரில் போளூர் உதவி கோட்ட பொறியாளர் திருநாவுக்கரசு தலைமையில் போளூர் டவுன் பேருந்து நிலையப் பகுதி சிந்தாதிரிப்பேட்டை தெரு, பஜார் வீதி, டைவர்ஷன் ரோடு, திருவண்ணாமலை சாலை, ரயில் நிலையம் செல்லும் சாலை உள்ளிட்ட உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை ஜேசிபி இயந்திரம் மற்றும் லாரியின் உதவியுடன் நெடுஞ்சாலை துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டனர். இந்நிலையில் காந்தி பூங்கா அருகே உள்ள ஒரு சில ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருந்தன அவற்றை இன்று நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றி வருகின்றனர். மேலும் இந்நிகழ்வின் போது உதவி பொறியாளர் வேதவல்லி மற்றும் நெடுஞ்சாலை துறை அலுவலர்கள் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News