அண்ணியை கத்தியால் குத்தியவர் மீது வழக்கு

தக்கலை;

Update: 2025-03-07 05:26 GMT
குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள மூலச்சல் பகுதி  கிறிஸ்து நகரை சேர்ந்தவர் ஜெயந்தி (54). இவரது கணவரின் தம்பி ஜான் வெஸ்லி. இவர்களது பக்கத்து வீட்டில் வசித்து வருகிறார். நேற்று ஜெயந்தி தனது வீட்டில் உள்ள குப்பைகளை தீ வைத்து எரித்துள்ளார்.       அப்போது இதனை கண்ட ஜான் வெஸ்லி இங்கு ஏன் தீ வைத்து எரியுற்றுகிறாய்?  என கேட்டு அண்ணி ஜெயந்தியை ஆபாசமாக பேசியதுடன், தான் வைத்திருந்த கத்தியால் தலையில் வெட்டி உள்ளார்.       இதில் காயமடைந்த ஜெயந்தி குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது பற்றிய புகாரின் பேரில் தக்கலை போலீசார் ஜான் வெஸ்லி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News