மீனவர்கள் திடீரென அமைச்சர் வீட்டை முற்றுகையிட்டு மனு!

தருவைகுளம் பகுதியை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் மீனவப் பெண்கள் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து தூண்டில் வளைவை உடனடியாக அமைத்து தர கோரிக்கை மனு அளித்தனர்.;

Update: 2025-03-07 06:41 GMT
தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் மீனவ கிராமத்தில் கடல் அரிப்பு காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு உடனடியாக தமிழக அரசு மீன்வளத்துறை தூண்டில் வளைவு அமைத்து தர கோரி தருவைகுளம் பகுதியை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் மீனவப் பெண்கள் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து தூண்டில் வளைவை உடனடியாக அமைத்து தர கோரிக்கை தூத்துக்குடி அருகே உள்ளது தருவைகுளம் மீனவ கிராமம் இங்கு 500க்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் நாட்டுப் படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடித் தொழிலை செய்து வருகின்றனர் இந்நிலையில் தொடர்ந்து தருவைகுளம் கிராமத்தில் ஏற்பட்டு வரும் கடல் அரிப்பு காரணமாக தருவைகுளம் மீனவர்கள் மீன்பிடித்தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது மேலும் கடற் பகுதியில் இருந்த மீனவர் வலை பின்னும் கூடம் ஆகியவை கடல் அரிப்பு காரணமாக பாதிக்கப்பட்டு கடலுக்குள்ளே சென்றுள்ளது இந்த கடல் அரிப்பு காரணமாக படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி படகுகளும் சேதமடைந்து வருகின்றன எனவே இந்த பாதிப்பில் இருந்து தருவைகுளம் மீனவ கிராமத்தை பாதுகாக்க தூண்டில் விளைவு அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.‌ இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட தருவைகுளம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் மீனவ பெண்கள் இன்று தூத்துக்குடி கணேஷ் நகர் பகுதியில் அமைந்துள்ள அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இல்லத்தில் நேரில் சந்தித்து மீனவர்கள் வரக்கூடிய சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே தங்கள் கிராமத்தில் தூண்டில் விளைவு அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து தூண்டில் விளைவு உடனடியாக அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அப்போது மீனவர்களிடம் பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தங்கள் பகுதியில் ஆய்வு நடைபெற்றுள்ளதாகவும் உடனடியாக இந்தத் திட்டத்தை செயல்படுத்த முடியாது அதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பின்னர் தான் செயல்படுத்த முடியும் என தெரிவித்தனர் இதற்கு கூறியிருந்த மீனவர்கள் கடந்த 4 ஆண்டுகளாக தங்களிடம் கோரிக்கை வைத்து வருகிறோம் ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை இன்னும் காலதாமதம் செய்தால் தாங்கள் மிகவும் பாதிக்கப்படுவோம் என தெரிவித்தனர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் மீனவ கிராமத்திற்கு வந்து சுமார் 350 கோடியில் தூண்டில் விளைவு அமைக்கப்படும் என உறுதி அளித்தீர்கள் ஆனால் இதுவரை செயல்படுத்தவில்லை எனவும் மீனவர்கள் குற்றம் சாட்டினர்.

Similar News