மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் தலைமையில் மரியாதை
திமுக முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் நினைவு தினம்;
திமுக முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் நினைவு தினம் இன்று (மார்ச் 7) அனுசரிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு நெல்லை மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் அப்துல் வஹாப் தலைமையில் திமுகவினர் திரளாக கலந்து கொண்டு பேராசிரியர் அன்பழகனுக்கு மரியாதை செலுத்தினர். இதில் நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.