பொறியியல் கல்லூரியில் மகளிர் தின விழா

மதுரை அருகே பொறியியல் கல்லூரியில் மகளிர் தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது;

Update: 2025-03-08 06:36 GMT
மதுரை அருகே அழகர் கோவில் லதா மாதவன் கல்வி நிறுவனங்கள் இணைந்து உயர்திரு செயல் இயக்குனர் தினேஷ் மாதவன் அவர்கள் தலைமையில் பொறியியல் கல்லூரி முதல்வர் சரவணன் அவர்கள் முன்னிலையில் பள்ளி முதல்வர் புவனேஸ்வரி வரவேற்புரை நிகழ்த்த மகளிர் தின விழா இன்று (மார்ச்.8) கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் முதன்மை விருந்தினராக மேலூர் காவல்துறை ஆய்வாளர் திருமதி சிவசக்தி அவர்கள் கலந்து கொண்டு மாணவிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் .பெண்கள் தங்களுடைய ஆளுமை திறமைகளை எவ்வாறு கையாள வேண்டும் , ஒவ்வொரு தினமும் வரக்கூடிய சவால்களை திறம்பட கையாள வேண்டும் என்றும் மாணவிகள் சிறந்த முறையில் படித்து அனைத்து துறைகளிலும் தலைமை தாங்கி நாட்டை வளர்க்க பெண்களின் பங்கு அவசியம் என்பதை அழகாக எடுத்துரைத்தார்கள் , மகளிர் தின விழா போட்டிகளில் பங்கு பெற்ற மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது..விழாவில் சிறப்பு விருந்தினராக விருட்சம் அறக்கட்டளை தலைவர் பிரீத்தி முரளி ,யூ கேன் செயல் இயக்குனர் அஹிப சுபஹனி , செயல் அலுவலர்கள் முத்துமணி மீனாட்சி சுந்தரம் காந்தி நாதன் பிரபாகரன் முதல்வர்கள் முருகன் , தவமணி . மனித வளத்துறை அலுவலர ஹேமலதா வேலை வாய்ப்பு அலுவலர் அனிஷா பாத்திமா ஆகியோர் கலந்து கொண்டனர் முடிவில் கலைக் கல்லூரி பேராசிரியர் மணிமேகலை நன்றியுரை வழங்கினார். விழாவினை பேராசிரியர்கள் சண்முக லட்சுமி நித்தியா ஷோபனா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்

Similar News