அரியலூரில் வழக்குரைஞர்கள் சங்கத்தினர் உண்ணாவிரதம்
அரியலூரில் வழக்குரைஞர்கள் சங்கத்தினர் உண்ணாவிரதம் நடைபெற்றது.;
அரியலூர், மார்ச் 8- சட்டவிதிமுறைகளை பின்பற்றாமல் தனிச்சையாக செயல்பட்டு வரும் ஜெயங்கொண்டம் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி கணேஷைக் கண்டித்து, அரியலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் வழக்குரைஞர்கள் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில், நீதிபதி கணேஷை பணியிடம் மாற்றம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் மனோகரன் தலைமையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் சட்டப் பேரவை உறுப்பினரும், மூத்த வழக்குரைஞருமான கு.சின்னப்பா கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் வழக்குரைஞர் செல்ல.சுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இதே போல், செந்துறையிலும், நீதிமன்ற வழக்குரைஞர்கள் தங்களது பணிகளை புறக்கணித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.