மகளிர் தினத்தை ஒட்டி பிரசவித்த தாய்மார்களுக்கு நலத்திட்ட உதவிகள்.

மகளிர் தினத்தை ஒட்டி பிரசவித்த தாய்மார்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.;

Update: 2025-03-08 11:38 GMT
அரியலூர், மார்ச் 8- உலக மகளிர் தினத்தையொட்டி அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள  பிரசவித்த தாய்மார்களுக்கு நலத்திட்ட உதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருக்குறள் கூட்டமைப்பின் மாநில துணைப் பொதுச் செயலரும், முன்னாள் அரசு வழக்குரைஞருமான எஸ்.வி.சாந்தி, அரியலூர் சாந்தி மருத்துவமனை சார்பில் பிரசவித்த 130 தாய்மார்களுக்கும், பச்சிளம் குழந்தைகளுக்கும் துணி வகைகள், ஊட்டச்சத்து பொருள்கள் மற்றும்   நலப் பெட்டகம்,  பரிசுப் பொருள்கள்  உள்ளிட்டவைகளை வழங்கி, மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் ரம்யா, நர்மதா, ஆயிஷா மற்றும் சாந்தி மருத்துவமனை மேலாளர் மகா.சரவணன், மகளிர் அமைப்பு நிர்வாகிகள், செவிலியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மகளிர் தினத்தை  கொண்டாடினர். : .

Similar News