சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது மகளிர் மட்டுமே பங்கு பெறும் நடை மாரத்தான் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது இதில் ஏராளமான ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் பங்கேற்பு
சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது மகளிர் மட்டுமே பங்கு பெறும் நடை மாரத்தான் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது இதில் ஏராளமான ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் பங்கேற்பு;
நீலகிரி மாவட்டம் வெலிங்டன் எம் ஆர் சி மையத்தின் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது இதில் மகளிர் மட்டுமே பங்கு பெறும் நடை மாரத்தான் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது இதில் ஏராளமான ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் பங்கேற்றனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் மையத்தின் சார்பாக சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இன்று உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக குன்னூர் அருகே உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் ( MRC) சார்பில் இன்று காலை 7 மணிக்கு தங்கராஜ் நினைவு மைதானத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவிற்கு தனுஸ்ரீ தாஸ் தலைமை வகித்தார்.இதில ஜும்பா நடனத்துடன் நிகழ்ச்சி துவங்கப்பட்டது. இதில் சிறுமிகள் முதல் 45 வயது உள்ள பெண்களுக்கான நடை மாரத்தான் போட்டி நடைபெற்றது.ஐந்து கிலோ மீட்டர் வரை நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை மற்றும் சான்று வழங்கப்பட்டது மேலும் தங்கராஜ் நினைவு மைதானத்தில் தொடங்கி பிளாக் பிரிட்ஜ், சப்ளை டிப்போ,மினி படகு இல்லம்,பேரக்ஸ், ராணுவ மருத்துவமனை வழியாக 5 கிலோமீட்டர் தூரத்தை நடந்து பிறகு தங்கராஜ் மைதானம் வந்தடைந்து. முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.இதில் ராணுவ அதிகாரிகள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் 300 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.