சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் JCI சார்பில் பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலர் ஜெயஸ்ரீ மற்றும் அலுவலகத்தில் பணிபுரியும் மகளிர்கள் அனைவரையும் சந்தித்து பொன்னாடை போர்த்தி இனிப்புகள், வழங்கியும்.;

Update: 2025-03-08 15:06 GMT
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் JCI சார்பில் பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலர் ஜெயஸ்ரீ மற்றும் அலுவலகத்தில் பணிபுரியும் மகளிர்கள் அனைவரையும் சந்தித்து பொன்னாடை போர்த்தி இனிப்புகள், வழங்கியும். பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் சுப்புலட்சுமி மற்றும் அங்கிருந்து அனைத்து பெண் காவலர்கள் அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி இனிப்புகள் வழங்கியும், நகராட்சி நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் அம்மா உணவகத்தில் பணிபுரியும் மகளிர்கள் அனைவரையும் சந்தித்து இனிப்புகள் வழங்கி மகளிர் தின வாழ்த்துக்கள் தெரிவித்தோம். பின்னர் மகளிர் உதவி எண் 181 ஸ்டிக்கர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் , அம்மா உணவகத்திலும் ஒட்டியும் மகளிர் தினத்தை சிறப்பாக கொண்டாடினோம் . இந்நிகழ்வில் பெரம்பலூர் JCI தலைவர் திருமதி கனகமணி, செயலாளர் வழக்கறிஞர் கரு .அய்யம்பெருமாள்,பொருளாளர் நாகரசன் JCI பொறுப்பாளர்கள் பாரதிராஜா, மணிகண்டன் ,வினோத் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Similar News