ஈர நிலப்பகுதிகளில் பறவைகள் கணக்கெடுக்கும் பணிகள்
தென்படாத பறவை இனமான பாம்பு தாரா, தூக்கனா குருவி, புள்ளி மூக்கு தாரா குறிப்பிட்ட பறவை இனங்கள் கண்டறியப்பட்டது. மேலும் உள்நாட்டு, வெளிநாட்டு அரியவகை பறவை இனங்கள் தென்பட்டதாக இந்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட வனத்துறையினர் தெரிவித்தனர்.;
பெரம்பலூர் மாவட்டத்தில் வனத்துறை சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 ஏரிகளில் ஈர நிலப்பகுதிகளில் பறவைகள் கணக்கெடுக்கும் பணிகள் வனத்துறையினர் மூலம் கடந்த 8, 9-ந்தேதிகளில் நடைபெற்றது. மாவட்ட வன அலுவலர் குகணேஷ் உத்தரவின்படி பறவைகள் கணக்கெடுக்கும் பணிகளுக்கு ஒருங்கிணைப்பாளர்களாக வனச்சரகர்கள் பழனிகுமரன் (பெரம்பலூர்), சுதாகர் (வேப்பந்தட்டை), சோமசுந்தரம் (டேப்), முருகானந்தன் (சமூக காடுகள்) ஆகியோர் செயல்பட்டனர். பெரம்பலூர், குரும்பலூர், துறைமங்கலம், செஞ்சேரி அரணாரை, பூலாம்பாடி, வெங்கலம், பெரியம்மாபாளையம், கீழப்புலியூர், எழுமூர், ஒகளூர், சிறுவாச்சூர், கொட்டரை, சாத்தனூர், கொளக்காநத்தம், காரை ஆகிய பகுதிகளில் உள்ள ஏரிகளிலும் மற்றும் எசனை ஏரி, அத்தியூர் ஏரியிலும் அரும்பாவூர் சித்தேரி, பொிய ஏரி என மொத்தம் 20 ஏரிகளில் பறவைகள் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்றது. பறவைகள் கணக்கெடுக்கும் பணியில் வனச்சரகர்கள், வனவர்கள், வன காப்பாளர்கள், வன காவலர்கள், பறவைகள் ஆய்வாளர்கள், உயிரியல் ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். இந்த கணக்கெடுப்பில் ஏரிகளில் பல்வேறு வகையான பறவை இனங்கள் கண்டறிந்து பறவைகள் கணக்கிடப்பட்டது. அதிகமாக தென்படாத பறவை இனமான பாம்பு தாரா, தூக்கனா குருவி, புள்ளி மூக்கு தாரா குறிப்பிட்ட பறவை இனங்கள் கண்டறியப்பட்டது. மேலும் உள்நாட்டு, வெளிநாட்டு அரியவகை பறவை இனங்கள் தென்பட்டதாக இந்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும் இக்கணக்கெடுப்பு பணியில் கண்டறியப்பட்ட பறவைகளின் இனங்களும், எண்ணிக்கைகளும் வனத்துறையின் சார்பாக இறுதியாக வெளியிடப்படவுள்ளது. மாவட்டத்தில் நில வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணியானது வருகிற 15, 16-ந்தேதிகளில் வனத்துறையினரும் மூலம் நடைபெறவுள்ளது.