மும்மொழி கல்விக் கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கம்
வீடு வீடாக சென்று முன்மொழிக் கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கம் பொதுமக்களிடையே அதிக வரவேற்பு;
பெரம்பலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக வேப்பூர் வடக்கு ஒன்றியத்தில் தேசிய மும்மொழி கல்விக் கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கம் துவங்கப்பட்டது . சமக்கல்வி எங்கள் உரிமை என்பதை உணர்த்தும் விதமாக சிறப்பு விருந்தினர் ராமச்சந்திரன், மாவட்ட பொதுச் செயலாளர் கலந்து கொண்டு முதல் கையெழுத்திட்டார். ஒன்றிய தலைவர் தர்மதுரை தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. கலந்து கொண்ட நிர்வாகிகள் சக்திவேல், கண்ணன், பழனிவேல், லட்சுமி, இலா கண்ணன், கருணாநிதி கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைத்து பாஜக சொந்தங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மாவட்ட நிர்வாகம் பாரதிய ஜனதா கட்சி பெரம்பலூர் மாவட்டம்.