நடுவீரப்பட்டு: நீர்மோர் பந்தல் திறந்து வைப்பு
நடுவீரப்பட்டு பகுதியில் நீர்மோர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.;
கடலூர் மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட நடுவீரப்பட்டு ஊராட்சியில் பொது மக்கள் பயன்பெறும் வகையில் நீர்மோர் பந்தலை கடலூர் கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக பொருளாளர் எம்ஆர்கேபி கதிரவன் துவங்கி வைத்தார். உடன் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.