பன்னிரண்டாவது முறையாக ரத்த தானம் செய்த இளைஞர்களுக்கு பாராட்டு
மகளிர் தினத்தில் ரத்த தானம் செய்த இளைஞர்;
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் ரத்தம் தேவைப்பட்டது. இதனையறிந்த மக்கள் நீதி மய்யம் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் முத்துக்குமார் மகன் நடிகர் ரவி மோகன் ரசிகர் மன்றத்தின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஹரிஹரன் பெரம்பலூரிலிருந்து சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு சென்று ரத்தம் வழங்கினார். இவர் 12-வது முறையாக ரத்த தானம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.