நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள சேம்பக்கரை பழங்குடியினர் கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு.......
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள சேம்பக்கரை பழங்குடியினர் கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு.......;
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள சேம்பக்கரை பழங்குடியினர் கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு....... சமவெளிப் பகுதியான மேட்டுப்பாளையம் சத்தியமங்கலம் வனப்பகுதிகளில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி காட்டு யானைகள் ஆண்டுதோறும் நீலகிரி மாவட்டத்தை நோக்கி வருவது வழக்கம் இந்நிலையில் குன்னூர் அருகே உள்ள சேம்பக்கரை கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் 33 மற்றும் அவரது நண்பர் ரவி இருவரும் நேற்று இரவு வீட்டிற்கு சென்று கொண்டிருந்த பொழுது காட்டு யானை விஜயகுமாரை தாக்கியது இதில் விஜயகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் தகவல் அறிந்தகுன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று விஜயகுமாரின் சடலத்தை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம்பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்காட்டு யானை தாக்கியது குறித்து வனத்துறையினர் மற்றும் மேல் குன்னூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.