ராமநாதபுரம் புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கம்
கமுதியிலிருந்து செங்கோட்டைப்பட்டிக்கு புதிய வழித்தடத்தில் அரசு பேருந்து இயக்கப்பட்டது.;
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியிலிருந்து பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் நலன் கருதி செங்கோட்டைப்பட்டிக்கு பேரையூர் வழியாக அரசு பேருந்து இயக்க வேண்டுமென முதுகுளத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், பால்வளத்துறை அமைச்சருமான ஆர்.எஸ்.ராஜகண்ணப்பனிடம் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமைச்சரின் பரிந்துரையின் பெயரில் கமுதி போக்குவரத்து கிளை மேலாளர் ராஜ்குமார், தொழிலாளர் முன்னேற்ற சங்கம் பொதுச் செயலாளர் பச்சம்மாள் ஆகியோரது முன்னிலையில் திமுக ஒன்றிய செயலாளர் எஸ்.கே.சண்முகநாதன் புதிய பேருந்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். அப்போது திமுக ஒன்றிய துணைச் செயலாளர் தங்கப்பாண்டி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டி, தொமுச பொருளாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதனைத் தொடர்ந்து செங்கோட்டைப்பட்டிக்கு வந்த பேருந்தை கிராம மக்கள் மலர் தூவி, ஆரத்தி எடுத்து வரவேற்றனர்