ராமநாதபுரம் கடலில் விழப்பட்ட ஆமைக்குஞ்சுகள்
வாலிநோக்கம் அருகே பொரிக்க வைக்கப்பட்ட ஆமை குஞ்சுகள் கடலில் விடுவிப்பு;
ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் சீலா மீன்பாடு உள்ள பகுதியில் வனத்துறையினரால் பத்துக்கும் மேற்பட்ட ஆமை குஞ்சு பொரிப்பகத்திலிருந்து முட்டைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இன்று கீழக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட வாலிநோக்கம் கடற்கரை பகுதியில் 127 ஆமைக்குஞ்சுகள் ராமநாதபுரம் வனச்சரக அலுவலர் செந்தில்குமார் மற்றும் காவல் கண்காணிப்பாளர் சந்தீஸ் தலைமையில் கடலில் விடப்பட்டன. ஆமைக்குஞ்சுகள் தன் தாய் வீடான கடலை பார்த்த சந்தோசத்தில் தாய் வீட்டுக்கு செல்கிற மகிழ்ச்சியில் ஆமைக்குஞ்சுகள் துள்ளி ஓடிய காட்சியை அனைவரும் கண்டு ரசித்தனர். இந்தாண்டு இதுவரை வனத்துறையினரா ஆமைமுட்டைகள் சேகரிக்கப்பட்டு, 3000 ஆமைக்குஞ்சுகளை கடலில் விட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.