ராமநாதபுரம் குட்டி தீர்த்த மலை பொதுமக்கள் அவதி

கனமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் அவதி;

Update: 2025-03-11 10:35 GMT
ராமநாதபுரத்தில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் அவதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தென் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது அதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் கனமழையானது வெளுத்து வாங்கியது இதன் காரணமாக ராமநாதபுரம் பேருந்து நிலையம், மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை பகுதி மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இந்த மழை நீரானது குளம் போல் தேங்கி வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அன்றாட பணிகளுக்கு செல்லக்கூடிய நபர்கள், அரசு மருத்துவமனை பணியாளர்கள், நோயாளிகள் நோயாளிகளை பார்வையிட வரும் பார்வையாளர்கள் என அனைவரும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர் நகராட்சி நிர்வாகம் ஒரு சில பகுதிகளில் தேங்கிய மழை நீரை எடுத்து வரும் நிலையில் பல பகுதிகளில் மழை நீர் ஆனது அப்புறப்படுத்தாமல் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர் இதேபோல பட்டணம் காத்தான் குயவன்குடி வாலாந்தரவை உடைச்சியார் வலசை பெருங்குளம் உச்சிப்புளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் பலத்த காற்று மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிப்படைந்தது வாகன ஓட்டிகள் சாலைகளில் முகப்பு விளக்குகளை ஒளிர விட்டு சென்றனர் நீண்ட நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்த நிலையில் வானிலை அறிவிப்பின்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று கடுமையான இடியுடன் கூடிய கன மழை பெய்ததால் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து சாலைகளில் ஓடியது ராமநாதபுரம் மாவட்டத்தில் 193 மில்லி மீட்டர் மழை பதிவானது அதிகபட்சமாக ராமநாதபுரத்தில் 28 மில்லி மீட்டரும் குறைந்தபட்சமாக மண்டபம் 0.80 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது ராமேஸ்வரம் தங்கச்சிமடம் பகுதிகளில் மழை பெய்யவில்லை ராமநாதபுரம் மாவட்டத்தில் கடுமையான தண்ணீர் தேங்கிய நிலையில் மாலை நேரத்தில் அதிகமான வெப்பத்தால் தண்ணீர் வெளியேறியது

Similar News