ராமநாதபுரம் கண்டெடுத்த தங்கச் செயினை கொடுத்த நபருக்கு போலீசார் பாராட்டு

தூரி அருகேசாலையில் கிடந்த நான்கரை பவுன் தங்க நகையை காவல் நிலையத்தில் ஒப்படைத்தவருக்கு DSP மற்றும் போலீசார் பாராட்டு;

Update: 2025-03-12 02:25 GMT
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள சின்ன உடப்பங்குளம் கிராமத்தைச் சேர்ந்த CCTV MECHANIC செந்தில்குமார் என்பவர் முதுகுளத்தூரில் இருந்து ஊருக்கு இருசக்கர வாகனத்தில் செல்லும் போது தூரி என்ற இடத்தில் சாலையில் சிறிய கவர் கிடந்ததை கண்டு அதில் புதிய நான்கரை பவுன் தங்க நெக்லஸ் இருப்பது தெரிய வந்தது. உடனடியாக முதுகுளத்தூர் திரும்பி சென்று பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் முதுகுளத்தூர் DSP சண்முகத்திடம் ஒப்படைத்தார். இந்த செயலை முதுகுளத்தூர் DSP மற்றும் இன்ஸ்பெக்டர் ஜான்சிராணி உள்ளிட்டோர் பாராட்டினர். தொலைந்த நகை யாருடையது என்பது குறித்து முதுகுளத்தூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News