ராமநாதபுரம் மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க தடை
கச்சத்தீவு திருவிழா: ஐந்து நாட்களுக்கு ராமநாதபுரம் மாவட்டம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை;
ராமநாதபுரம் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருதாந்திர திருவிழா வரும் 14 மற்றும் 15 ஆகிய இரு தினங்கள் கொண்டாடப்பட இருப்பதையடுத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்றிலிருந்து வரும் ஞாயிற்றுக்கிழமை வரை மண்டபம் மற்றும் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் மீன்பிடி அனுமதி சீட்டு ரத்து செய்யப்பட்டு மீன் பிடிக்க கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை எடுத்துள்ளனர். இந்த மீன்பிடி தடை காரணமாக சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப்படகுகள் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.