அரியலூர் மாவட்ட திமுக சார்பில்,மத்திய அரசுக்கு எதிரான,தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்,தொகுதி சீரமைப்பு, உன் மொழி கொள்கை குறித்து கண்டன பொதுக்கூட்டம்

அரியலூர் மாவட்ட திமுக சார்பில்,மத்திய அரசுக்கு எதிரான,தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்,தொகுதி சீரமைப்பு, உன் மொழி கொள்கை குறித்து கண்டன பொதுக்கூட்டம் அண்ணா சிலை அருகில் நடைபெற்றது.;

Update: 2025-03-13 01:55 GMT
அரியலூர், மார்ச்13- அரியலூர் அண்ணா சிலை அருகில், அரியலூர் மாவட்ட திமுக சார்பில்,மத்திய அரசுக்கு எதிரான,தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்,தொகுதி சீரமைப்பு, மும்மொழி கொள்கை குறித்து,மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்,கழக சட்டத்திட்ட திருத்தக்குழு இணைச் செயலாளர் சுபா.சந்திரசேகர் தலைமையில், மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதில்,மாவட்ட செயலாளரும்,போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், தலைமை கழக பேச்சாளர் மண்ணை சோம.இளங்கோ ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.பி.பாலசுப்பிரமணியன், நீல.மகாலிங்கம் மற்றும் மாநில,மாவட்ட, ஒன்றிய,நகர,பேரூர்,கிளை நிர்வாகிகள்,அனைத்து அணி நிர்வாகிகள், உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Similar News