கோவை: காட்டெருமை தாக்கி வனக்காவலர் உயிரிழப்பு !
காட்டெருமை தாக்கி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த வன காவலர் அசோக்குமார் உயிரிழப்பு.;
கோவையில் கடந்த 10-ம் தேதி மாலை தடாகம் வனப்பபகுதி, தோலம்பாளையத்தில் உள்ள விவசாய நிலத்திற்குள் வனத்துறை அதிகாரிகள் ஒரு காட்டு எருமையை விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த காட்டெருமை தோலம்பாளையம் வனக் காவலர் அசோக் குமாரைத் தாக்கியதில் அசோக்குமார் படுகாயமடைந்தார். படுகாயமடைந்த அசோக்குமாருக்கு சீலியூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரண்டு நாட்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது வனத்துறையினருடைய மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.