குமரியில் மாயமான மூன்று மாணவிகள் மதுரையில் மீட்பு

நாகர்கோவில்;

Update: 2025-03-13 06:39 GMT
நாகர்கோவில் பகுதியை சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவிகள் 2 பேர், 11 வகுப்பு மாணவி ஆகிய 3 பேர் நேற்று முன்தினம் மதியம் வீட்டிலிருந்து வெளியே சென்றனர். பின்னர் இரவு வரை வீடு திரும்பவில்லை .இதை அடுத்து மாணவியின் பெற்றோர்கள் பல இடங்களில் தேடி பார்த்தனர்.  சக தோழிகளிடம் விசாரித்த போது அவர்கள் கொடைக்கானல் செல்வது குறித்து பேசிக் கொண்டிருந்தது தெரிய வந்தது.       உடனடியாக நாகர்கோவில் இருந்து கொடைக்கானல் ரயில் கிடையாது என்பதால், பஸ்சில் சென்றிருக்க வேண்டும் என்பதால் வடசேரி பஸ் நிலையம் சென்று உறவினர்கள் விசாரித்தனர். பஸ் நிலைய அதிகாரி உடனடியாக  போக்குவரத்து கழக துணை மேலாளர் மகாதேவனை சந்தித்து உதவி கோரினார்.       அவர் மதுரை நோக்கி சென்ற பஸ்களில் தகவல் தெரிவித்தார்.  இதில் 3.45 மணிக்கு புறப்பட்ட மதுரை மண்டலத்தை சேர்ந்த திருப்பூர் பஸ்சில் மாணவிகள் மதுரைக்கு சென்று கொண்டிருப்பது தெரிய வந்தது. அந்த பஸ்ஸின்  நடத்தினர் மாணவிகள் புகைப்படத்தை வாட்ஸப்பில் அனுப்பியதை தொடர்ந்து, அவர்கள் மாயமான மாணவிகள் தான் என்பது உறுதி செய்யப்பட்டது.        மாணவிகள் மதுரை பஸ் நிலையத்தில் இறங்கியதும் காவல்துறை மூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டனர். அவர்களை பெற்றோர்கள் மதுரைக்கு சென்று, நேற்று  அழைத்து வந்தனர். மாணவிகளிடம் விசாரணை நடத்திய போது கொடைக்கானலை சுற்றி பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்ததால் எவ்வளவு தொலைவு என்பது தெரியாதுமால் விரைந்து வந்து விடலாம் என்று நினைத்து பஸ்ஸில் பயணித்ததாக தெரிவித்தனர். மாணவிகளுக்கு போலீசார் அறிவுரை கூறி  அனுப்பி வைத்தனர்.

Similar News