காங்கிரஸ் பிரமுகர் உடல் அடக்கம் 

கருங்கல்;

Update: 2025-03-14 03:51 GMT
குமரி மாவட்டம் மாங்கரை பகுதியை சேர்ந்தவர் காட்வின் நேசராஜ் ( 38) இவர் காங்கிரஸ் பிரமுகர். இவருக்கு கவிதா என்ற மனைவியும் ஜோஸ்வா மிராக்கிளின் என்ற ஐந்து வயது மகன் உள்ளனர். கவிதா கதனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். காட்வின் நேசராஜ் நோய்வாய்பட்டு  நேற்று முன் தினம் திடீரென இறந்தார்.      இறுதிச் சடங்கு முன் நேசராஜன் மனைவி திடீரென கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் கணவரின் 2 1/2 ஏக்கர்  நிலத்தை கணவரின் சகோதரர் பெயரில் மாற்றி பதிவு செய்திருப்பதாகவும், சொத்தையும்  வீட்டையும் கணவரின் இறுதி சடங்கு முன் மீட்டு மகன் பேருக்கு எழுதி தர வேண்டும் எனவும், குழந்தையின் பெயரில் சொத்துக்களை எழுதும் வரை கணவர் உடலை அடக்க செய்ய விடமாட்டேன் என தெரிவித்திருந்தார்.       இந்த நிலையில் நேற்று கருங்கல் சப்ரஜிஸ்டர் அலுவலகத்தில் நேசராஜ் மனைவி கவிதா உறவினர்கள் மற்றும் எதிர் தரப்பினர்  வந்திருந்தனர். இதனை அடுத்து கிள்ளியூர் தாசிலர் ராஜசேகர், ராஜேஷ்குமார் எம்எல்ஏ, மாவட்ட பதிவாளர் கயல்வழி  முன்னிலையில் ஏற்கனவே எழுதிய பத்திரத்தை ரத்து செய்து, காட்வின் நேசராஜ் மகன் பெயரில் சொத்து பதிவு செய்து கொடுத்தனர். இதனை அடுத்து நேற்று மதியம் இறுதிச் சடங்குகள் பின் காட்வின் நேசராஜன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Similar News