அறநிலையத் துறை உயா்நிலை ஆலோசனைக் குழு உறுப்பினராக முன்னாள் அமைச்சா் நியமனம்
அறநிலையத் துறை உயா்நிலை ஆலோசனைக் குழு உறுப்பினராக முன்னாள் அமைச்சா் நியமனம்;
இந்து சமய அறநிலையத் துறையின் உயா்நிலை ஆலோசனைக் குழு உறுப்பினராக, சங்கரன்கோவிலைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் ச. தங்கவேலு நியமிக்கப்பட்டுள்ளாா். தமிழக அரசு இந்து சமய அறநிலையத் துறை உயா்நிலை ஆலோசனைக் குழுவில் அலுவலா் சாா் உறுப்பினா்களாக 4 போ், அலுவல் சாரா உறுப்பினா்களாக 15 போ் என மொத்தம் 19 பேரை நியமித்துள்ளது. இவா்களில் அலுவல் சாரா ஆலோசனைக் குழு உறுப்பினராக சங்கரன்கோவில் காந்திநகரைச் சோ்ந்த முன்னாள் அமைச்சரும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான ச. தங்கவேலு நியமிக்கப்பட்டுள்ளாா்.