மக்கள் நலத் திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும்! -ராணி ஸ்ரீகுமாா் எம்.பி.

மக்கள் நலத் திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும்! -ராணி ஸ்ரீகுமாா் எம்.பி.;

Update: 2025-03-16 02:15 GMT
தென்காசியில் உள்ள ஆட்சியா் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு-கண்காணிப்புக் குழுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் பேசியது: மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். மக்களின் கோரிக்கைகளை பரிசீலித்து, அனைத்துத் தரப்பினரும் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்களைத் தீட்டி செயல்படுத்த வேண்டும் என்றாா் அவா். கூட்டத்தில், மத்திய அரசாலும், மாநில அரசாலும் பல்வேறு துறைகள் சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் முன்னிலை வகித்தாா். மாவட்ட வன அலுவலா் அகில்தம்பி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்னாண்டோ, செயற்பொறியாளா் (ஊரக வளா்ச்சித் துறை) ஏழிசைச்செல்வி, மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் உதயகிருஷ்ணன், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் ஷேக் அப்துல்லா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Similar News