ஆய்க்குடி அருகே கழிப்பிட கட்டிடத்துக்காக பொதுமக்கள் கோரிக்கை

கழிப்பிட கட்டிடத்துக்காக பொதுமக்கள் கோரிக்கை;

Update: 2025-03-16 06:48 GMT
தென்காசி மாவட்டம் தென்காசி அருகில் உள்ள ஆய்க்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட 1வது வார்டு பகுதியில் 2010-2011ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் சுகாதார கழிவறை கட்டப்பட்டது. ஆனால் இக்கழிவறை எவ்வித பயன்பாடுமின்றி, மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் பூட்டியே காணப்படுகிறது. இப்பகுதி மக்கள் சுகாதார வளாகம் இல்லாத காரணத்தினால் திறந்த வெளி கழிப்பிடம் செல்லும் அவல நிலை உள்ளது . உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பார்வையிட்டு அந்த கழிப்பிட கட்டிடத்தை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News