சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர்

எரியோடு அருகே சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொடுமைப்படுத்திய முதியவர் - சிறுவன் மருத்துவமனையில் அனுமதி;

Update: 2025-03-18 18:47 GMT
சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர்
  • whatsapp icon
திண்டுக்கல் எரியோடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 3-ம் வகுப்பு படிக்கும் மாணவனை பள்ளிக்கு சென்று மீண்டும் வீட்டுக்கு செல்லும் வழியில் தங்கராஜ்(65) என்ற முதியவர் சிறுவனை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் சிறுவனுக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டது இதனை கவனித்த பள்ளி ஆசிரியர் மாணவனை அன்புடன் அழைத்து பேசி விசாரணை மேற்கொண்ட போது இந்த அதிர்ச்சிகரமான தகவல் தெரிந்தது. இதைத்தொடர்ந்து ஆசிரியர் திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக அதிகாரிகள் மற்றும் வருவாய் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். மேலும் சிறுவனின் உறவினர் சிறுவனை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். இதுகுறித்து எரியோடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News