சாலையோரத்தில் வைக்கப்பட்டுள்ள பேனர், விபத்து ஏற்படும் அபாயம்

சாலையோரத்தில் வைக்கப்பட்டுள்ள பேனர், விபத்து ஏற்படும் அபாயம்;

Update: 2025-03-19 15:01 GMT
சாலையோரத்தில் வைக்கப்பட்டுள்ள பேனர், விபத்து ஏற்படும் அபாயம்
  • whatsapp icon
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம், கம்பர் தெரு செல்லும் நுழைவு பகுதி, ஜி.எஸ்.டி., சாலையில், மார்ச் 1ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளுக்காக, தி.மு.க.,வினர் பேனர் வைத்தனர். ஆளும் கட்சியினர் என்பதால் பகுதிவாசிகள், வாகன ஓட்டிகள் எதிர்ப்பு தெரிவிக்க முடியாமல் அமைதி காத்தனர். இந்நிலையில், பிறந்த நாள் முடிந்து தற்போது வரை, அந்த பேனர் அகற்றப்படவில்லை. இதனால், வாகன ஓட்டிகள் பீதியில் சென்று வருகின்றனர். இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:போக்குவரத்திற்கு இடையூறாக ஜி.எஸ்.டி., சாலையில் விளம்பர பேனர் வைக்க, நெடுஞ்சாலை துறை, காவல் துறை எப்படி அனுமதி வழங்கியது எனத் தெரியவில்லை. முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் முடிந்து, தற்போது வரை அந்த பேனர் அப்படியே உள்ளது. இரவு நேரத்தில் வரும் வாகனங்கள் இந்த பேனர் மீது மோதி, விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, விபத்தை ஏற்படுத்தும் விதமாக வைக்கப்பட்டுள்ள இந்த பேனரை அகற்ற, சம்பந்தப்பட்ட தி.மு.க., நிர்வாகிகள் அல்லது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Similar News