தேன்கனிக்கோட்டையில் 8 டன் தர்பூசணி பழங்கள் அழிப்பு.
தேன்கனிக்கோட்டையில் 8 டன் தர்பூசணி பழங்கள் அழிப்பு.;

கிருஷ்ணகிரி மவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியில் ஓசூர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி முத்து மாரியப்பன் தலைமையில் உணவு பாதுகாப்புத் துறையினர். பல்வேறு உணவு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தேன்கனிக் கோட்டையில் இருந்து அஞ்செட்டி சாலையில் தர்பூசணி பழங்கய் விற்பனை செய்த 3 கடைகளில் ஆய்வு செய்த போது தர்பூசணி பழங்களில் ரசாயன நிறமூட்டிகளை கலந்திருந்தது தெரியவந்தது. அந்த கடைகளில் இருந்து சுமார் 8 டன் அளவில் தர்பூசணி பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்த பழங்களை குழி தோண்டி அதில் போட்டு அழித்தனர். கடை உரிமையாளர்கள் எச்சரிக்கை விடுத்னர்.