தர்மபுரி மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு பொது தேர்வு துவக்கம்,
தர்மபுரி மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு பொது தேர்வு துவக்கம், 318 பள்ளிகளில் 20,00,36 மாணவ மாணவியர் தேர்வு எழுதுகின்றனர்;
தமிழகத்தில் இன்று காலை பத்தாம் வகுப்பு பொது தேர்வு துவங்கி உள்ளதை தொடர்ந்து தர்மபுரி அவ்வையார் அரசு மேல்நிலைப்பள்ளி அதியமான் அரசு மேல்நிலைப்பள்ளி இலக்கியமேட்டி அரசு மேல்நிலைப்பள்ளி இதுபோன்று தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 318 பள்ளிகளைச் சேர்ந்த 20 ஆயிரத்து 36 பேர் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதுகின்றனர் இதில் 9 ஆயிரத்து 610 மாணவிகளும், 10,426 மாணவர்களும் இன்று பொது தேர்வை எழுதுகின்றனர். தர்மபுரி மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 10:00 மணிக்கு துவங்கியதை தொடர்ந்து மாணவ மாணவிகள் முதல் நாள் தேர்வினை ஆர்வமுடன் எழுதுகின்றனர்.