சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை;

காட்டாங்கொளத்துார் ஒன்றியம், திருவடிசூலம் கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.இங்கு பழமையான ஞானபுரீஸ்வரர் சமேத கோவர்தனாம்பிகை கோவில் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள பிரதான சிமென்ட் சாலை, கடந்த சில மாதங்களாக சிதிலமடைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக, இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே, இச்சாலையை சீரமைக்க வேண்டுமென, வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது: திருவடிசூலம் செல்லும் பிரதான சாலையில் 200 மீட்டர் துாரம் சாலை பெயர்ந்து, ஜல்லி கற்கள் பரவலாகி காணப்படுகின்றன.இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் கிராம மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள பைரவர், கருமாரியம்மன், சிவன் கோவில்களுக்கு வரும் வெளியூர் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். சிவன் கோவிலுக்கு பங்குனி உத்திரத்தில் நடக்கும் திருக்கல்யாணத்திற்கு பெரும் பக்தர்கள் வரும் நிலையில், சாலை சேதமடைந்து உள்ளதால், அவர்கள் சிரமப்படுவர். எனவே, மாவட்ட நிர்வாகம் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.