முத்தூர் காங்கேயம் இடையே சாலையின் நடுவில் ஒளிரும் பட்டை பொருத்தும் பணி
முத்தூர் காங்கேயம் இடையே சாலையின் நடுவில் ஒளிரும் பட்டை பொருத்தும் பணி நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மேற்பார்வையில் நடைபெறுகிறது.;

முத்தூர்-காங்கயம் இடையே கணேசபுரம், ரங்கப்பையன் காடு, ராசாத்தாவலசு, அமராவதிபாளையம் பிரிவு, மேட்டாங்காட்டுவலசு, வரட்டுக்கரை, வாய்க்கால் மேடு, புளியங் காட்டுப்புதூர், செட்டியார்பாளையம், வாலிபனங்காடு வரை சாலையின் நடுப்பகுதி, கிராமங்களுக்கு செல்லும் பிரிவு சாலை, சாலையின் வளைவு பகுதி ஆகிய இடங்களில் நெடுஞ்சாலை துறை மூலம் புதிதாக வெள்ளை கோடுகள் வரையப்பட்டு அமைக்கப்பட்டு உள்ளன. இதனை தொடர்ந்து வெள்ளகோவில் நெடுஞ் சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி பொறியாளர் சத்ய பிரபா ஆகியோர் உத்தரவின் படி சாலை ஆய்வாளர்கள் முன்னிலையில் சாலை பணி யாளர்கள் அனைத்து வெள்ளை வண்ணம் கோடுகளுக்கு விபத்துகளை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரவு நேரங்களில் ஒளிரும் சிவப்பு, வெள்ளை வண்ண எச்சரிக்கை பட்டையை பொருத்தினர்.