அவலூர்பேட்டையில் தெரு நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அவதி
தெரு நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அவதி;

விழுப்புரம் மாவட்டம்,மேல்மலையனூர் அருகே அவலூர்பேட்டை பகுதியில் தெரு நாய்கள் அதிக அளவில் உள்ளது. இதனால் மக்கள் வெளியே செல்ல முடியவில்லை. தெரு நாய்கள் கூட்டமாக வலம் வருவதால் வாகனத்தில் செல்வதற்கும் பெரும் அச்சம் நிலவுகிறது. கடந்த மூன்று மாதங்களில் 40க்கும் மேற்பட்டோர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். தெரு நாய்களைப் பிடித்து தடுப்பூசி செலுத்த, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.