ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முப்பெரும் விழா
பழவேற்காடு அருகே தாங்கல் பெரும்புலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது;
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருகே தாங்கல் பெரும்புலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காடு அருகே தாங்கல் பெரும்புலம் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.பள்ளி ஆண்டு விழா,கொன்றை வேந்தன் ஒப்புவித்தல்,தமிழ் எண்கள் மற்றும் வரைபடத்தில் மாவட்டங்களை கண்டறிந்து நினைவூட்டல் என முப்பெரும் விழாவாக நடைப்பெற்ற நிகழ்ச்சியில் மாணவ,மாணவிகள் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்தனர்.கொன்றை வேந்தன் வரிகளை தொடர்ந்து 5 நிமிடங்கள் இடைவிடாது பார்க்காமல் ஒப்புவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.வரைபடத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களின் பெயர்களை எழுதியும்,தமிழ் எண்களை யார் கேட்டாலும் ஒற்றை,இரட்டை, மூன்றுக்கும் மேற்பட்ட இலக்கங்களில் எழுதி காட்டி அசத்தினர்.அடிப்படை வசதிகள் குறைந்தும்,சுமார் 6 கிலோமீட்டர் தூரம் சென்று பேருந்து மற்றும் மருத்துவமனை,மார்கெட்டை பயன்படுத்தும் கிராம மக்கள் மத்தியில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளையும், பெற்றோர்களையும் திறக்குறள் தூதுவர்.ராம்ராஜ் மண்டியிட்டு வணங்கி பாராட்டினார். தினமும் சுமார் 60 கிலோமீட்டர் தூரம் பேருந்தில் பயணம் செய்து, அதற்கு மேல் பேருந்து வசதி இல்லாததால் காட்டு வழியாக சுமார் 12 கிலோமீட்டர் தூரம் பயணித்து பள்ளியை நடத்திவரும் பள்ளி தலைமை ஆசிரியை கல்பனாவை சிறப்பு விருந்தினர்கள் வெகுவாக பாராட்டினர்.