நாகர்கோவில் நேசமணி நகர் சப்-இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையில் நேற்று கார்மல் நகர் சந்திப்பில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவரிடம் சந்தேகத்தின் பேரில் சோதனை நடந்தது. இதில் அவரிடம் மூன்று கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது அடுத்து அதை பறிமுதல் செய்து அவரை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கணேசபுரம் பகுதியை சேர்ந்த கவினேஷ் (22) என்பது தெரிய வந்தது. இவர் ஸ்கேன் சென்டர் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். பார்வதிபுரம் பகுதியில் ஒரு நபரிடம் இருந்து இந்த கஞ்சாவை வாங்கியதாக தெரிவித்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து கவினேஷை கைது செய்தனர். அவருடைய வீட்டிலும் சோதனை நடத்தினர்.